எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப் பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.
அத்துடன், இலங்கையில் பாரம்பரியமாகத் தேர்தல்களில் வாக்களிப்பது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.
ஆனால் தற்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வாக்களிப் பின் போது அதிகளவான சுகாதார ஆலோசனை வழி காட்டல்களை கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தினால் வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.