2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 76 வாக்களிப்பு நிலையங்களிலும் 15 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் பாரளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் நடைபெற இருக்கின்றது.
அந்த வகையில் இந்த வருடம் வாக்கு எண்ணும் நிலையமாக புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது என மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் அதே நேரத்தில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது .
அதே நேரத்தில் மன்னாரை பொறுத்தவரையில் 88ஆயிரத்த 842 வாக்காளர்களும் இதிலே 5 ஆயிரத்து 807 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திலே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய இருக்கின்றார்கள்.
அவர்களுக்கான வசதிகள் புத்தளம் மாவட்டத்திலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் 405 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலிலே 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.
மன்னார் மாவட்டதை பொறுத்த வரையில் இதுவரை 45 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளது. இந்த 45 முறைபாடுகளின் அடிப்படையிலே இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதே போல் 6 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் கூடுதலான முறைப்பாடுகள் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் வேட்பாளர்கள் இல்லாத வாகனங்களில் ஸ்ரிக்கர் ஒட்டுதல் போன்ற செயற்படுகளில் பலர் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன
மேலும் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் மூன்று முறைப்படுகள் தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்டத்திற்கான 4196 தபால் மூல வாக்களிப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது .
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள் இராணுவ முகாம்கள் பொலிஸார் மற்றும் சிவில் நிலையம் போன்றவற்றில் 11ஆயிரத்து152 தபால் மூல வாக்களிப்புக்கள் இடம் பெற்று அதில் 200 தபால் மூல வாக்களிப்புக்கள் மாத்திரம் அடையாளமிடப்படாத நிலை காணப்படுவதாகவும் ஏனைய இடங்களில் தபால் மூல வாக்களிப்புக்கள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.