ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.