பணப் புழக்கம் மிக்கதொரு அரசாங்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் தகுதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு

283 0

பணப் புழக்கம் மிக்கதொரு அரசாங்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் தகுதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

நாட்டுக்கு கிடைக்க வேண்டிய எழாயிரம் மில்லியன் அந்நிய செலாவணி இல்லாமல் போயுள்ளதாகவும் மீண்டும் அதை மீள பெறமுடியாது எனவும் அவர் கூறினார்.

´எமக்கு வெளியில் நன்கொடைகளையும் உதவிகளையும் பெற வேண்டிய நிலை உள்ளது. அரசாங்கத்திற்கு அதனை செய்ய கூடிய இயலுமை இல்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த உதவிகளை பெற்றுக்கொண்டன. ஆனால் அது இலங்கைக்கு கிடைக்கவில்லை.

எவரும் எமக்கு பிணை வழங்குவதில்லை. ஐ.தே.க ஆட்சியில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை´ என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.