தேர்தல் வெற்றியின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசாங்கத்தை அமைக்க முடியும் என பொதுஜன முன்னணியின் ஹம்பாந்தோட்ட மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (27) ஒளிபரப்பான பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
கடந்த அரசாங்கம் சில கட்சிகளை குத்தகைக்கு வாங்கியே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
´சௌபாக்கியமான இலக்கு´ என்ற விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயம் மக்களை மையப்படுத்திய யாப்பை உருவாக்குவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் கருத்துக்களை பெற்றே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஸ மேலும் கூறினார்.