சிறைக் கைதிகள் சிலரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீண்டும் களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பேருந்தினுள் ஏற்றிக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை பேருந்தினுள் வீசிச் சென்ற நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பொதியை வீசி தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரை துரத்திச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சந்தேகநபரை கைது செய்துள்ளார்.
இதன்போது, ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொஸிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.