யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா உறுதி

290 0

கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து கடமைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்த குறித்த கடற்படை சிப்பாய் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 2 தடவைகள் பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாதபோதும், 3ம் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.