தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்களை ஆபத்தை எதிர்கொள்கின்றனவா?

314 0

ஜனாதிபதியின் தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகினறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமாகிய க. துரைராசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் உட்பட்ட கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ள குசலான் என்ற சிற்றரசனால் ஆளப்பட்ட பிரதேசம் என அடையாளம் காட்டுவதனான குசலானன் மலை என்ற சிறப்பு பெயர் பெற்ற ஒரு முருகன் தலத்தில் உள்ள விக்கிரங்கங்கள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்று பார்வையிட்ட பின்னர் அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவது 2015க்கு முன்னர் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி ஏற்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகினறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேற்றுச்சேனையில் பௌத்தபிக்குகள் அங்குவந்து சைவஆலயத்தை ஆக்கிரமிப்பு செய்ய முனைந்து மக்களின் எதிர்ப்பினால் விரட்யடிக்கப்பட்டனர் என துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

வெட்டிய மலை என்ற பகுதியில் இதேவிதமான சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.<br />
இதன் பின்னர் குசலாணன் மலை சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.