வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெனிக்பாம் பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.