பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள சிக் மாவட்டத்துக்குட்பட்ட மான்ட்பெல்லியெர் என்ற இடத்தின் அருகேயுள்ள மான்ட்பெரியர்-சர்-லெஸ் என்ற கிராமத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் தொண்டு நிறுவன சேவகர்களாக பணியாற்றிய சுமார் 70 ஆண்-பெண்கள் தங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 75 முதல் 90 வயதுக்குட்பட்ட முதியவர்கள் ஆவார்கள். நேற்றிரவு இந்த இல்லத்துக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.
இந்த கொடூர தாக்குதலில் அங்கு தங்கியிருந்த ஒருபெண் சேவகி பலியானதாகவும், தாக்குதல் நடத்தியவன் தப்பியோடி விட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.