சிறிலங்காவில் பகைமையை தூண்டும் கருத்துக்களினால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு- மஞ்சுள கஜநாயக்க

247 0

சிறிலங்காவில் தேர்தல் பிரசாரங்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் பகைமையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றமையினால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதென தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஞ்சுள கஜநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பெரும்பாலான அரசியல் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் வெளியிடும் கடுமையான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் பகைமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதனால் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் வன்முறைகள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதேவேளை விருப்புவாக்குகளுக்காக சில கட்சிகளுக்குள் மோதல்களும் இடம்பெறுகின்றன.

எனவே தேர்தல் வன்முறைகளை தவிர்ப்பதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.