அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர்- பவ்ரல்

284 0

அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில உயர் அரசஅதிகாரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுப்பது குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் முக்கிய பதவிகளை வகிக்ககூடியவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்வதும் ஆதரிப்பதும் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகஹ ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மேற்பார்வை மற்றும் நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடுவது பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆதரிப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அவ்வாறான அதிகாரிகள் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு உதவவேண்டும் என ரோகன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.