முடங்கிப்போயுள்ள கட்டுநாயக்கா விமானநிலையம்!

290 0

katunayake-sri-lanka-7கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் கணினித்தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறினால், விமானநிலையச் செயற்பாடுகள் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது.

நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் கணினிக் கட்டமைப்பு திடீரெனச் செயலிழந்தது.

இதனால் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகள் பாதிப்படைந்தன. பயணிகள் வெளிச்செல்ல முடியாமலும், விமானத்திற்கு அனுமதிக்கப்படாமலும் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இரண்டரை மணிநேரத்துக்குப் பின்னர், மாலை 5.45 மணியளவில் கணினி கட்டமைப்பு மீண்டும் செயற்படத் தொடங்கிய பின்னரே, நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்கியது.இதனால் விமானம் புறப்படும் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டது.