ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு சந்தியா எக்னெலிகொடவுக்கு அரசதரப்பில் அழுத்தம்!

368 0

SRI LANKA

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் தனக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.இந்த மனு அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு தடையாக இருப்பதால், அதனை திரும்ப பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் தரப்பு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தான் உயிருடன் இருக்கும் வரை மனுவை திரும்ப பெறப் போவதில்லை என சந்தியா குறிப்பிட்டுள்ளார்.