தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பேராலயம் ஆகும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அன்னையை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா நடந்து வருகிறது.