6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றும் வால் நட்சத்திரம் முன் காதலியிடம்

310 0

6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன் தனது காதலியிடம் ஒரு நபர் ‘லவ் ப்ரபோஸ்’ செய்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஜான் நிகோடரா (33) எரிகா பென்டிர்(26) என இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஜான் தனது தோழியான எரிகாவை காதலித்து வந்துள்ளார்.
வானியல் தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வம் நிறைந்த ஜான் தனது பெண் தோழியிடம் தனது காதலை வித்தியாசமான முறையில் ’லப் ப்ரபோஸ்’
வெளிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார்.
இது குறித்து தேடலை மேற்கொண்ட ஜான் 6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகே வரும் நியோவைஸ் கம்ட் வால்நட்சத்திரம் இம்மாதம் அமெரிக்காவில் தோன்றுவதை அறிந்தார்.
இதையடுத்து திட்டமிட்ட ஜான் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய வகையில் உள்ள அந்த வால் நட்சத்திரம் பூமியை கடக்கும் பகுதியில் வைத்து தனது காதலியிடம் ’ப்ரபோஸ்’ செய்ய முடிவேடுத்தார்.
இதையடுத்து, வால் நட்சத்திரம் தோன்றும் நாளான கடந்த 18 ஆம் தேதி ஜான் நார்த் ஹமிஸ்பெர்க்கில் உள்ள மலைத்தொடர்பகுதிக்கு தனது காதலியை
அழைத்து சென்றார்.
எரிகா மற்றும் ஜான் ஜோடி
இரவு நேரத்தில் வால் நட்சத்திரம் பூமியை கடந்த போது ஜான் முழங்காலிட்டு தனது காதலி எரிகாவிடம் ’லவ் ப்ரபோஸ்’ செய்தார். இதை சற்றும் எதிர்பாராத எரிகா ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.
இறுதியில் ஜானின் ப்ரபோசலை எரிகா ஏற்றுக்கொண்டார். ஜான் முழங்காலிட்டு தனது காதலி எரிகாவிடம் ப்ரபோஸ் செய்தபோது
6 ஆயிரத்து 800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் நியோவைஸ் கம்ட் வால் நட்சத்திரம் பூமியை கடந்து சென்றது.
இந்த புகைபடங்கள் தற்போது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நடட்சத்திரம் முன்பு காதலர் தனது காதலியிடம் ப்ரபோஸ் செய்வது போன்ற புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.