
நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல நேற்றைய தினம் (24) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்யுமாறு நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த அவர் இன்று (25) நீர்க்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.