சிறிலங்காவில் ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே உள்ளது – ரணில்

298 0

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றும் நாட்டைப் பாதுகாக்கும் திறன் தமது கட்சிக்கே இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வேறு கட்சியிலிருந்து போட்டியிட கட்சித் தலைமை அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது என்றும் சிலர் கருத்து தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்தோடு இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி இருப்பதாக நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஜூலை முதலாம் திகதி நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.