ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் பறந்த அமெரிக்க போர் விமானத்தால் பயணிகள் காயம் என ஈரான் குற்றச்சாட்டியுள்ளது.
ஈரான் நாட்டிலிருந்து துருக்கியில் உள்ள பெய்ரூட் விமான நிலையத்திற்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த விமானம் நேற்று பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென துருக்கி எல்லையில் அமெரிக்க விமானம் பயணிகள் விமானத்தை நோக்கி மிகவும் அருகில் வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத விமானி நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்டு விமானத்தை உடனடியாக மேலே நோக்கி செலுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் திடீரென செங்குத்தாக விமானம் மேலே உயர்ந்ததால் விமானிகள் ஏராளமானோர் காயம் அடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் அமெரிக்க விமானம் போதுமான இடைவெளி விட்டே பறந்தது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணு ஆயுத பிரச்சனையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா ஈரானின் முக்கிய ராணுவ தளபதியை ஈராக் எல்லையில் விமான தாக்குதல் நடத்தி கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது