தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும் என்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்ப படிவம் வழங்கும் தேதி மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.