ராஜீவ் காந்தி கொலை பின்னணியும் – பிரியங்கா சந்திப்பும் என்ற தலைப்பில் நளினி சுயசரிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் வெளியீட்டு விழாவில் வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன், தியாகு, ஓவியர் வீரசந்தானம், நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார். அந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என்று பத்மாவதி அம்மாள் குறிப்பிட்டார்.
மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இந்த புத்தகத்தை தொகுத்துள்ளார்.
அதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகள், பிரியங்கா – நளினி சந்திப்பு என்ற நளினி எழுதிய சுயசரிதை புத்தகத்தை வைகோ வெளியிட திருமாவளவன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.