கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செந்தில்வாசனையும், சுரேந்திரனையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
இதையடுத்து கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கவில்லை.