ஐஸ் போதை பொருளுடன் நால்வர் கைது – தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

253 0

புத்தளத்தில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நால்வரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் அவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றைய 5 பெண்களும் தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் வலய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (23) காலை குறித்த குறித்த கலால் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 126 கிராம் பெறுமதியான ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் வவுனியா கலால் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட்ட கலால் கட்டுப்பாட்டாளர் ஒருவரும் அடங்குவதுடன் அவருடன் சேர்த்து 3 ஆண்களும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று புத்தளம் மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான அநுர இந்ரஜித் புத்தாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கலால் திணைக்கள கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட சந்தேக நபர்களை 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இவர்கள் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நாளை (25) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.