இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆவா குழுவின் உறுப்பினர்கள் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த இளைஞர்களின் உறவினர்கள் அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக் கொள்ள உதவுமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
இதன்போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.