கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து கனடா பிரதமர் அறிக்கை- பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்

412 0

கறுப்பு ஜூலையை நினைகூர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதிக்கப்பட்ட மக்களுக்;கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

கனடா பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இன்று நாங்கள் இலங்கையில் கறுப்புஜீலையில் இடம்பெற்ற பயங்கரமானசம்பவங்களை நிiவுகூறுவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம்.

பலவருடமாக அதிகரித்து வந்த பதட்டம் மற்றும் அமைதியின்மைக்கு பின்னர் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் கொழும்பின் பல பகுதிகளில் மூண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் எண்ணிலடங்காதவர்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்த கலவரங்கள் 26 வருட ஆயுதமோதலுக்கு காரணமாக அமைந்தன இதன்போது பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர்இழந்தனர்,சமூகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன,நிரந்தனமான உடல்ரீதியான உளரீதியான காயங்கள் ஏற்பட்டன

கனடா இலங்கையில் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகுபவர்களுக்கு அடைக்கலம் அளித்ததன் மூலம் கனடா இதற்கு பதில் நடவடிக்கையை எடுத்தது.

கறுப்பு ஜூலையின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடவடிக்கைகள் மூலம் 1800 தமிழர்கள் கனடாவில் கனடாவில் மீள்குடியேறியதுடன் தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்பினர்- சிறந்த நாட்டை உருவாக்க உதவினர்.
மிகப்பெரும் இழப்பு மற்றும் துன்பங்களின் மத்தியில் அவர்கள் வழங்கிய பங்களிப்பு வலுவான,மேலும் அனைவரையும் உள்வாங்கும்,கனடாவை உருவாக்க உதவியது.

கனடா உலகில் பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடாக காணப்படுகின்றது.

கனடாவின் சார்பில் கறுப்பு ஜூலையின் போது துயரங்களை,அனுபவித்த தங்களின் நேசத்துக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் இலங்கையில் நிரந்தர நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு வழிவகுக்ககூடிய பொறுப்புக்கூறும் பொறிமுறைறையை உருவாக்குவது குறித்து கனடா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது

இந்த இலக்கை நோக்கிபாடுபவர்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் எங்கள் ஆதரவை வழங்கிவருகின்றோம்.