சிறிலங்காவில் அநுரூத்த சம்பாயோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

293 0

சிறிலங்காவில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க இடைகால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி அநுரூத்த சம்பாயோ தாக்கல் செய்த ரீட் மனுவை நாளை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக மனுதாரர் நீதிமன்ற அனுமதியின்றி திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

குறித்த திருத்த பத்திரம் தொடர்பான ஆவணங்கள் தமக்கு உரியவகையில் கிடைக்கவில்லை என அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.