யாழ்.ஆயர் இல்லத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தங்க சங்கிலி திருடர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் தங்க ஆபரணத்தை இழுத்து அறுத்தபோது சுதாரித்துக் கொண்ட பெண் அதனை தடுக்க முற்பட்ட வேளை அரைவாசி தங்க சங்கிலியோடு திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.