திருடர்களின் தாக்குதலுக்கு இலக்கான பெண்

458 0

திருடர்களின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை தாக்கி அச்சுறுத்தியதுடன், வீட்டிலிருந்த நகைகள், பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த பெண்ணின் காப்பை கழற்றுமாறு திருடர்கள் கூறியுள்ளனர்.

எனினும் அதற்கு பெண் மறுத்த நிலையில் பெண்ணை தாக்கிய திருடர்கள், பெண்ணில் கையில் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.