மாவீரர் என்ற சொல்லைப் பிரயோகிக்காது நினைவுகூரலாம்!

370 0

dm-swaminathanயுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என அழைக்காமல் நினைவுகூருமாறு டி.எம்.சுவாமிநாதன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு தென்னிலங்கையின் காலி நகரில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மீள் குடியேற்ற அமைச்சில் நடைபெற்றது. இதன்போது சேர்.பொன் இராமநாதனின் பேரனான டி.எம்.சுவாமிநாதன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்நிலையில், மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பாக தமிழர் தாயகத்திலும், தென்மாகாணத்தவர்களாலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது,

மாவீரர்கள் என்ற சொல்லைப் பிரயோகிக்கும்போது தமிழ் – சிங்கள மக்களிடையே இருக்கும் நல்லிணக்கம் பாதிப்படையும். எனவே உயிர் நீத்த உறவுகளை மாவீரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது நினைவுகூருமாறு கேட்டுக்கொண்டார்.