உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில முக்கியத் தகவல் களை இன்னும் சிலதினங்களில் நாட்டு மக்களுக் குத் தெரியப்படுத்துவதாகவும், குறித்த தாக்குதல்கள் ஒரு திட்டமிட்ட கொலை என்பதைத் தான் ஆதாரபூர்வாக நிரூபித்துக் காட்டுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் செயற்பாட்டாளர் ஹரின் பெர்ணான்டோ.
பதுளையில் இடம்பெற்ற பேரணியில் மேலும் தெரிவித் ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பற்றிக் கொண்டுள்ளார். அவரது தனிப்பட்ட சொத்தா ?
இந்தக்கட்சி. ஒருமுறையாவது அவரால் ஜனாதிபதியாக வரமுடியவில்லை, பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுத் தாலும், அதனை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடிய வில்லை இந்நிலையில் ஐ.தே.க.வின் வெற்றிக்காக உழைத்த மக் களுக்கு என்ன செய்வது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சிறந்த முறையில் செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே அவர் தோல்வியடைவதற்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஒரு காரணமாக இருந்தன.
இது உண்மையாகவே திட்டமிட்ட கொலையாகும். ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவும் சஜித்தை தோல்வியடையச் செய்வதற்காகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே இந்த தாக்குதல், எம்நாட்டு முஸ்லிம் மக்களுக்குக் கத்தோலிக்க மக் களைக் கொலைச் செய்ய வேண்டும் என்ற தேவை எப்போதும் இருக்கவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பில் உண்மைத் தகவலை நான் நாட்டுக்குத் தெரியப்படுத்துவேன். இது தொடர்பில் என க்கு சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்னும் சில தினங்களில் அதனை நான் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
அதற்குப் பின்னர் என்னையும் மறைந்த அமைச்சர் ஸ்ரீப்பதி சூரிய ஆராச்சியை போன்று வாகன விபத்தை ஏற்படுத்தி கொலைச் செய்ய முயற்சிப்பார்களோ தெரியவில்லை. அவ்வாறு நான் உயிரிழந்தாலும் ஆத்மாவாக வந்து ராஜபக்ஷாக்களின் ஆட்சியை இல்லாதொழிப்பேன்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்மால் வழமையைப் போன்று சுவாசிக்கக் கூட முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் அவசியம் தானா? எமக்கு விருப்பமில்லாவிட்டாலும் , ராஜபக்ஷாக்கள் என்ற குடும் பத்தினருக்காக நாங்கள் இதனைச் செய்யவேண்டியுள்ளது.
அவர்களது பலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே இவ்வா றான நெருக்கடியான நிலைமையில் தேர்தலை நடத்து வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
தொடர்ந்தும் அவரிடம் இது தொடர்பில் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை. அதனால் தான் நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.