சிறீகாந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன்

263 0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது;

சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவர் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்பு செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால்கூட பரவாயில்லை. நான் அதற்கு தயாராக இருக்கின்றேன் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தன்னுடன் விவாதம் செய்ய சுமந்திரனுக்கு தகுதியில்லை என்று கூறிய கருத்து தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நான்கு தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டி சாட்டுக்களை கூறிக்கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திப்பிடிக்கும் அவசியம் எமக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றார்.