கொரோனா வைரஸ் நிலவரம்- அரசாங்கம் மக்களிடமிருந்து உண்மையை மறைக்கின்றது

269 0

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைக்கின்றது என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் சந்தேகத்துக்குரியவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் எதிர்கால்தில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் பல சுகாதார உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கும் ஆபத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 18 நாட்டில் பரவுகின்றது போல தோன்றுகின்றது,மக்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படுகின்றதா என சந்தேகம் காணப்படுகின்றது என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகள் குறித்து இடம்பெற்ற மோசடிகளால் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழகம் சோதனைகளை நிறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்பது தெரியவந்த பின்னரே பல்கலைகழகம் இந்த முடிவை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவரம் நெருக்கடியாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் வழங்கிய ஆலோசனைகளை புறக்கணித்துள்ள அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்கள் குறித்தே கவனமாக உள்ளது எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சில சுகாதார அதிகாரிகள் தங்கள் பணிகளை புறக்கணித்துள்ளமைக்கு இதுவே காரணமாகயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஆபத்தான வைரசிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மறந்துவிட்டது போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.