சிறிலங்காவில் கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் குறிப்பிட்டார்.
கொவிட் 19 நெருக்கடியால் அழுத்தங்களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை செலவு செய்ய நேரிடுமெனவும் அதன் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.