சிறிலங்காவில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி மாயம்

288 0

சிறிலங்கா  தெல்தெனிய, அம்பகொட பகுதியை சேர்ந்த விக்டோரிய நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (21) பிற்பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கென்கல்ல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.

கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்