துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது

267 0
எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து போரொ 12 வ​கை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் 6, உள்நாட்டு துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு ஒன்று, ரி56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 23 மற்றும் அதற்கான மெகசின் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக 3 வாள்கள், இராணுவ சீருடை ஒன்று மற்றும் இராணுவ மேலாடைகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.