சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க தவறும் பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தற்போது 1,000 ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்கப்படுகின்றது என கூறினார்.
இரண்டு போத்தல் சட்டவிரோத மதுபானங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு கூட அபராதம் அதிகம் என குறிப்பிட்ட அவர், ஒரு பிரதிநிதி சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்கத் தவறினால் அபராதம் குறைந்தபட்சம் 1 மில்லியனாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு அவ்வாறு குற்றம்சாட்டப்படுபவர்களை இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தங்கள் கட்சியைப் பொருட்படுத்தாமல், சட்டத்தை மதித்து நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.