சம்மாந்துறை நிந்தாவூர் வீடுகளில் இருந்து ஆபத்தான வெடிபொருட்களை மீட்டோம்- பொலிஸ் அதிகாரி

315 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயன்படுத்திய வெடிபொருட்களை போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருட்களை ஏப்பிரல் 26 ம் திகதி சம்மாந்துறை மற்றும் நிந்தாவூரில் மீட்டோம் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரiணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் அதனை தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் வீடொன்றிலிருந்து வெடிக்ககூடிய 119 பொருட்களையும் நிந்தாவூரிலிருந்து 91வெடிபொருட்களையும் மீட்டோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு வீடுகளிலும் பெருமளவு ஜெலிக்னைட்களை மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சம்மாந்துறையில் உள்ள வீடொன்றிலிருந்து ஜெலிக்னைட்களை மீட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலர் விசாரணை செய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய மூன்று சம்பவங்கள் ஏப்பிரல் 26 ம் திகதி இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டாளச்சேனையிலுள்ள வீடொன்றை சோதனையிடவேண்டிய தேவை உள்ளது என தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்,அந்த வீட்டை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்டவேளை ஜஹ்ரான் ஹாசிமின் சகோதரர் முகமட் ஜைனியின் பென்டிரைவ்கள் கார்ட்டிஸ்க்கள் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் போன்ற பலவற்றை மீட்டோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாணந்;துறை நீர்கொழும்பிலிருந்து சம்மாந்துறை மற்றும் நிந்தாவூரில் உள்ள வீடுகளுக்கு பல பொருட்கள் மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிட்ட புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்தார் என பொலிஸ் அதிகாரி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடுகளை முகமட் நியாஸ் என்பவர் வாடகைக்கு பெற்றிருந்தார் அவர் பின்னர் சாய்ந்தமருதில் சடலமாக மீட்கப்பட்டார் எனவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை முகமட் நியாஸ் இறப்பதற்கு முன்னர் அவரது தொலைபேசி இலக்த்தை பெற்று அவருடன் தொடர்புகொண்டோம்,அவர் தொலைபேசியில் எங்களை சந்திக்க வருவதாக தெரிவித்தார் ஆனால் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நான் அந்தகராஜின் கதவை உடைத்து உள்ளே செல்லுமாறு குண்டை செயல் இழக்கவைக்கச்செய்யும் பிரிவினரை கேட்டுக்கொண்டேன் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.அந்த வீட்டில் வீடியோவில் காணப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜாமத் உறுப்பினர்கள் அணிந்தது போன்ற உடைகள் காணப்பட்டன என பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.