நல்லூர் கந்தசுவாமிகோயில் திருவிழா- பல கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

308 0

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர்ப் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானம் யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்ற விசேட அமர்வின்போது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் எடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர் களுக்கு உத்தியோகப் பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

இதனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும் என்பதுடன் மேலும் அன்னதானம், வியாபார நிலையங் கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றினையும் இம் முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது