சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும்
மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. காசிமேட்டில் இருந்து நாள்தோறும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல 70 விசைப்படகுகள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
மீன்பிடி இறங்குதளத்தில் மீன் விற்பனை செய்ய 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.