மின் கட்டண விவகாரம்- திமுக போராட்டம்

250 0

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வரும் 21 ஆம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடைபெற இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தின் முன் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சிஐடி காலனியில் உள்ள வீட்டின் முன்பு தி.மு.க. எம்பி கனிமொழியும், அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்டியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி மின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.