தான் உட்பட சிலரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை நிராகரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று சம்பத் அபேகோன் மற்றும் முஹம்மத் லபார் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த மேன்முறையீட்டு மனுவை நிராகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதற்கு மேலதிகமாக வழக்கு கட்டணமாக 25,000 ரூபாவை நீதிமன்றத்திற்கு செலுத்துமாறும் மனுதாரரான ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.