சிறிலங்காவில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம்

349 0

சிறிலங்காவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவையின் நிமித்தம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித் த அல்விஸ் ஹட்டன் வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தீவிரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஆர் நூறுதீன் பொலிஸ் விசேட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.