கம்பஹாவில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியருக்கு கொரோனா – மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

238 0

கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த மாணவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் குறித்த ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய பாடசாலை ஆலோசகரான இவர், கம்பஹாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ள நிலையில், குறித்த மாணவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.