மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகொன்றினை கடலில் வைத்து மறித்த கடற்படையினர் ஆவணங்களை கோரியுள்ளனர்.
எனினும் உரிய ஆவணங்களை நாங்கள் வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் எங்களை தாக்க தொடங்கினார்கள் என தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையா தாக்கப்பட் மீனவர்களில் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தாங்கள் உரிய ஆவணங்களை காண்பித்த பின்னரே கடலுக்கு சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் தங்களை முழங்காலில் இருக்கவைத்து தாக்கியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்