வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி

465 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே வாக்குவாதத்தில் சிறை காவலர் ஒருவர் தலையிட்டதாலேயே நளினி தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.