சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து வெளியிடும் தகவல்கள் கதைகள் போன்றவற்றை சர்வதேச சமூகம் நம்பவில்லை போலத் தோன்றுகின்றது என முன்னாள அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ள அவர் தாங்கள் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களை நம்புகின்றோமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இலங்கை கட்டியெழுப்புவது மிகவும் அவசியம் என எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எங்கள் வாழ்க்கை தரம் வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது என நாங்கள் கருதினால் வெளிநாடுகளின் நம்பிக்கையை நாங்கள் பெறுவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டவேளை இலங்கை அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
2000 நோயாளிகளை கொண்ட இலங்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை ஆனால் 45000 நோயாளிகளை கொண்ட சிங்கப்பூர் அந்த பட்டியலில் இடம்பிடித்தது என எரான் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் உண்மையை தெரிவிக்கின்றது என இலங்கை மக்களும் நம்பவில்லை என்றும் என்றான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.