ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஒரு முக்கியமான ஒரு தருணத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி கடந்தகாலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் விலகித் தங்கள் சொந்த அரசியல் கட்சியை உருவாக்கினர், இதன் விளைவாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார் எனத் தெரிவித்தார்.
புதிய முகங்களில் ஐக்கிய தேசியக் கட்சியானது தனது நம்பிக்கையை வைத்துள்ளது என்றும் இனிமேலும் குறைபாடுள்ளவர்களுடன் ஒன்றுபட பார்க்காது என்றும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.