மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பலி

260 0

வவுனியா – கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சீரற்ற காலநிலையை தொடர்ந்து வீசிய பலத்த காற்றினால் வேப்பம் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட மேலும் மூவர் காயமடைந்தனர் இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.