வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுழிபுரம் மேற்கு பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. தனிப்பட்ட முரண்பாடு ஒன்றே வாள்வெட்டு சம்பவமாகியுள்ளது.
இதில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது கெய்துள்ளனர்.