யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த விரிவுரையாளர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபிரிவு விரிவுரையாளரான கொழும்பு களனி பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தாக்குதலிற்குள்ளானவரும் மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியுள்ளனர். ;இதன்போதே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.